மலேசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மலேசியாவில் ஆறு இலட்சத்து மூவாயிரத்து 122பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 39ஆவது நாடாக விளங்கும் மலேசியாவில் இதுவரை மூவாயிரத்து 182பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 748பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 86பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 84ஆயிரத்து 369பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 883பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக ஐந்து இலட்சத்து 15ஆயிரத்து 571பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.