பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் 57இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் வைரஸ் தொற்றினால் 57இலட்சத்து ஆயிரத்து 29பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரான்ஸில் இதுவரை ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 916பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 953பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 84பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 98ஆயிரத்து 70பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 571பேர் தீவிரசிகிச்சை பிரிவில் உள்ளனர்.