தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
அதன்படி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய செயற்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் ஊரடங்கு காலப்பகுதியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இதேவேளை ஊரடங்கு காலத்தில் அனைத்து அரச அலுவலகங்களும் 30 சதவிகித ஊழியர்களுடன் செயற்பட அனுமதி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.