உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38இலட்சத்தைக் கடந்தது.
அத்துடன் மொத்தமாக 17கோடியே 60இலட்சத்து 48ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர வைரஸ் தொற்றினால் 15கோடியே 96இலட்சத்து 26ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இதற்கு அடுத்தப்படியாக அதிக கொவிட் பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக இந்தியா, பிரேஸில், பிரான்ஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன.