எரிபொருள் அதிகரிப்பு சர்ச்சை தொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (14) நடைபெறவிருந்த ஊடக சந்திப்பை ஆளும்கட்சி இரத்து செய்துள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் உயர்வுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு தனது அமைச்சரவை பதவியை இராஜினாமா செய்யுமாறு கூறியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றவிருந்தார்.
சாகர காரியவசத்தின் குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருள் உயர்வு என்பது அரசாங்கத்தின் கூட்டு முடிவு என்றும் சாகர காரியவசத்தை பொதுவிவாதத்திற்கு வருமாறும் சவால் விடுத்தார்.
அதன்படி, உதய கம்மன்பிலக்கு பதிலளிப்பதற்காக ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டபோதும் உயர்மட்டத்தின் அறிவுறுத்தலின் பேரில், இச்சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.