எதிர்க்கட்சித் துணைத்தலைவர் மற்றும் கொறடா பதவி யாருக்கு என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அ.தி.மு.க.அவசரக் கூட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை- ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் பகல் 12 மணிக்கு குறித்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 21 ஆம் திகதி சட்டப்பேரவை கூடும்போது, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பிலும் ஆராயப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.