நாட்டில் இன்று இரண்டாயிரத்து 284 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 25 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்து 922ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 917 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 464பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 203ஆகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், 33ஆயிரத்து 255 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 22இலட்சத்து 85 ஆயிரத்து 572 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை ஐந்து இலட்சத்து 44ஆயிரத்து 898 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.