இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தொலைக்காணொளி ஊடாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தொற்றா நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.