பயங்கரவாதத்தால் உலக அமைதி சீர்கெடுகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் எல்லைகளை மதித்து நடக்க வேண்டும்.
தங்களுடைய பிரச்சினைகளை சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். உலகின் அமைதி பயங்கரவாதத்தால் சீர்கெடுகிறது.
அதைவிட பெரிய சவாலாக, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்புகளும், நாடுகளும் உள்ளன. பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள், நிதியுதவி செய்பவர்கள், பாதுகாப்பு அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். அப்போதுதான் பயங்கரவாதத்தை வேரறுக்க முடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.