சேவை தொடங்கப்பட்டதிலிருந்து ஸ்கொட்லாந்தில் 98,000க்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
கணினியில் சிக்கல் ஏற்படுவதற்கு முன்பு 40,112 பதிவுகள் இங்கிலாந்து பொதுசுகாதாரத் துறை வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாக ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது
சான்றிதழ்கள் இப்போது தபால் மூலமாக மட்டுமே வழங்கப்படுகின்றன. ஜூன் 17ஆம் திகதிக்குள் 58,229 காகித பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன.
சான்றிதழ்கள், வெளிநாட்டு பயணத்தை செயற்படுத்தும் சர்வதேச தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டத்தில் பயன்படுத்தப்படலாம்.