நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் களுதுமெத, ஹபுகஸ்தலாவ, வீரபுர, பெரமன தெற்கு மற்றும் கொரகோய கீழ் பிரிவு ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, நாட்டில் மேலும் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று முதல் தனிமைப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.