பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, 43இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 43இலட்சத்து ஆயிரத்து 985பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 46இலட்சத்து 30ஆயிரத்து 040பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 976பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஒன்பதாயிரத்து 284பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 079பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 210பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.