அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகாவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கடந்த சில நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.