நாடாளுமன்ற அமர்வுகளை நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளைமறுதினம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கை நில மேம்பாட்டுக் கழக திருத்த சட்டமூலம் மற்றும் நில கையகப்படுத்தல் சட்டமூலத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மற்றும் செலவு போன்ற பல விடயங்கள் தொடர்பான விவாதங்கள் நாளை மறுதினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.