இந்தோனேசியாவில் முடக்க நிலை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் அங்கு ஒக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பியுள்ள அதேநேரம் நோயாளிகள் தொடந்தும் வெளியே உள்ள கூடாரங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக கடுமையான ஒக்ஸிஜன் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனால் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவும், தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செயற்பாடுகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.