கண்டி – பன்விலை சுகாதார வைத்திய அதிகார பிரிவிற்கு உட்பட்ட 14 கிராமசேவகர் பிரிவுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய குறித்தப் பகுதியில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
பன்விலை இராஜசிங்க மத்திய கல்லூரி, உளுகங்கை கொஸ்கம சிங்கள பாடசாலை, கலாபொக்க அபிராமி தமிழ் மகா வித்தியாலயம் போன்ற மத்திய நிலையங்களில் இன்று காலைஆரம்பிக்கப்பட்டதாக பன்விலை சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.