நாட்டில் இதுவரை 39 இலட்சத்து 91 ஆயிரத்து 392 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நேற்றைய தினம் மாத்திரம் 84 ஆயிரத்து 559 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 23 ஆயிரத்து 368 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 3 இலட்சத்து 85 ஆயிரத்த 669 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 444 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 14 ஆயிரத்து 464 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.