கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க முடியாது. ஆகையால் மக்கள் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து மருத்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எந்தவொரு தொற்றுக்கும் 3ஆவது அலை தவிர்க்க முடியாததாகவும், உடனடியாக ஏற்படுவதாகவும் இருந்திருப்பதற்கு வரலாற்றுப்பூர்வ மற்றும் சர்வதேச ஆதாரங்கள் உள்ளன.
அப்படியிருந்தபோதும், மூன்றாவது அலையைத் தணிக்க எல்லோரும் உழைக்க வேண்டியிருக்கும் இந்த நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் அரசுகளும், பொதுமக்களும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல் வெகுஜன கூட்டங்களில் பங்கேற்பதை பார்ப்பது வேதனையாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.