சுவிஸ்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், எதிர்வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார்.
நடைபெற்று முடிந்த விம்பிள்டன் டென்னிஸில் விளையாடும்போது அவருக்கு மூட்டு வலி இருந்துள்ளது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காயத்தில் இருந்து மீள்வதற்கான நடைமுறையை தொடங்கிவிட்டதாகவும், இந்த கோடைக்காலத்தின் இறுதியில் மீண்டும் விளையாட்டுக்கு திரும்பும் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் தரவரிசையில் நீண்ட காலமாக முதலிடத்திலிருந்த ரோஜர் பெடரர், 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
கடந்த சில வருடங்களாக பெரிதும் ஜொலிக்காத அவர், அண்மையில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார். கடைசியாக 2018ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்றிருந்தார்.