அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்படும் எண்ணைக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அந்த மாநிலத்தில் தற்போது 5 நாள் முடக்கம் அமுலில் உள்ளது.
நேற்று 16 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து விக்டோரியாவின் சுகாதாரப் பிரிவு முடக்கம் அமுல்ப்படுத்தப்பட்டது.
எல்லைகளை மூடுவது, வீட்டில் இருக்கும்படி உத்தரவிடுவது, பொருளியல் உதவி போன்றவற்றால் அவுஸ்ரேலியா கொரோனா தொற்றினையும் அதனால் ஏற்படக்கூடிய மரணங்களையும் பெருமளவில் தவிர்த்தது.
இருப்பினும், அங்குத் தடுப்பூசி போடும் பணிகள் மெதுவாக நடைபெறுவதால் கொரோனா தொற்று சூழலில் அந்நாட்டு அரசாங்கம் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
அவுஸ்ரேலியாவின் 25 மில்லியன் பேரைக் கொண்ட மக்கள் தொகையில் சுமார் 10 விகிதமானவர்களுக்கே முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.