ஹொங் கொங்கில் வர்த்தகம் செய்வதில் இருக்கும் அபாயங்கள் தொடர்பாக அமெரிக்காவின் ஆலோசனைக்கு தலைமை நிர்வாகி கேரி லாம் பதிலடி கொடுத்துள்ளார்.
வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் கண்காணிக்கப்படலாம் என்றும் வர்த்தகத் தகவல்களைச் சமர்ப்பிக்க வற்புறுத்தப்படலாம் என்றும் தெரிவித்து அமெரிக்கா அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் கருத்துகள் ஆதாரமற்றவை என்றும் அவை சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்றன என்றும் கேரி லாம் கூறியுள்ளார்.
அமெரிக்காவும் அதன் தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி நிறுவனங்களின் செயற்பாடுகளைப் பாதித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.