டெல்டா மாறுபாட்டை கட்டுப்படுத்த போராடும் தென் கொரியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை 1,784 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியான முடக்கம் அமுலில் இருப்பதனால் தொற்று பரவும் விகிதங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றன.
இருப்பினும் டெல்டா பரவல் காரணமாக தென் கொரியாவில் நான்காவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த வாரம் 2,381 நோயாளிகளின் மரபணு பகுப்பாய்வில் கிட்டத்தட்ட 40% டெல்டா மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் முதல் மொத்த 1,741 டெல்டா மாறுபாடு நோயாளிகள் கண்டறியப்பட்ட நிலையில் அதில் பாதிக்கும் மேற்பட்டவை கடந்த வாரம் கண்டறியப்பட்டன என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
நாட்டின் 52 மில்லியன் மக்களில் 32% பேர் குறைந்தது முதலாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதுவரை, தென் கொரியாவில் 182,265 நோயாளிகள் அடையளாம் காணப்பட்டுள்ளதுடன் 2,060 பேர் உயிரியிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.