கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 953 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 65 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது.