கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
அதன்படி, அவர்களுக்கு சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கொழும்பு- தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலை, ஐ.டி.எச் வைத்தியசாலை, அவிசாவளை வைத்தியசாலை, விஹாரமஹாதேவி பூங்கா ஆகிய இடங்களில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.