இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இந்தோனேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்து 636பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் இந்தோனேஷியாவில் 35இலட்சத்து 32ஆயிரத்து 567பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 35ஆயிரத்து 867பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆயிரத்து 747பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து இலட்சத்து 24ஆயிரத்து 11பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 29 இலட்சத்து ஏழாயிரத்து 920பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.