பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்து 30ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 59இலட்சத்து 52ஆயிரத்து 756பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் தொற்றினால், 29ஆயிரத்து 312பேர் பாதிக்கப்பட்டதோடு 119பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12இலட்சத்து 55ஆயிரத்து 240பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 887பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 45இலட்சத்து 67ஆயிரத்து 516பேர் பூரண குணமடைந்துள்ளனர்.