இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக 44இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் மொத்தமாக 44இலட்சத்து 617பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் இத்தாலியில் இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 242பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 200பேர் பாதிக்கப்பட்டதோடு 22பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 855பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 323பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 41இலட்சத்து 57ஆயிரத்து 520பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.