பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 33ஆயிரத்து 074பேர் பாதிக்கப்பட்டதோடு 94பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 61இலட்சத்து 79ஆயிரத்து 506பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 30ஆயிரத்து 701பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து இரண்டாயிரத்து 503பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 871பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 47இலட்சத்து 46ஆயிரத்து 302பேர் பூரண குணமடைந்துள்ளனர்.