கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 387 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 9 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 48 ஆயிரத்து 270 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 935 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.