கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 283 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 14 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரையில், 3 இலட்சத்து 62 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 263 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.