ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் மேற்கத்திய இராணுவ வீரர்களிடம் பெற்றோர் இன்றி குழந்தைகள் மட்டும் ஒப்படைக்கப்படுகின்றார்களா என்ற சந்தேகத்துக்கு பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த சில தினங்களாக வெளிநாட்டு துருப்புகளிடம் பெற்றோர் இன்றி சிறுமிகள் மட்டும் ஒப்படைக்கப்படும் காணொளிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறன.
இந்தநிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ், ‘காபூல் விமான நிலையத்தில் சுவருக்கு அப்பால் உள்ள மேற்கத்திய இராணுவ வீரர்களிடம் குழந்தை ஒன்று ஒப்படைக்கப்படுவது போன்ற காட்சிகள் பதிவியாகியுள்ளது.
பெற்றோர் மீட்கப்பட்ட பிறகே சுவருக்கு அப்பால் உள்ள இராணுவ வீரர்களிடம் குழந்தை கொடுக்கப்பட்டது. பெற்றோர் இன்றி வயது வராதோரை அழைத்து செல்ல முடியாது.
மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறோம். அதை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து ஆராய்ந்துவருகிறோம்.
நாட்டை விட்டு வெளியேற பல ஆப்கான் மக்கள் முயன்றுவருகின்றனர். எனவே, விமான நிலையத்தில் உள்ள பிரித்தானிய இராணுவ வீரர்கள் கடினமான சூழலை சந்தித்து வருகின்றனர்’ என கூறினார்.