தீண்டாமை சம்வங்களால் கோபம் ஏற்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையால் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் தலைமைச் செயலத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தீண்டாமை சம்பவங்களை கேள்விப்படும்போது வருத்தம் ஒருப்புறம் இருக்கிறது. மற்றொருப்புறம் கோபம் வருகிறது.
கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் ஜரி, தீண்டாமை ஏற்றத்தாழ்வு என்பது அப்படியே இருக்கின்றது. ஆதில் மாற்றம் செய்ய இன்னம் பல ஆண்டுகள் கடக்க வேண்டும் என்றே தெரிகிறது.
இதனை சட்டத்தின் மூலமாக ஓரளவு சரிசெய்ய முடியும். அத்தகைய சட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்’எனத் தெரிவித்தார்.