தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் திரையரங்குகள், பூங்காக்கள் ஆகியவை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம் கடைகளும் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக குறித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



















