பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 046பேர் பாதிக்கப்பட்டதோடு 100பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 66இலட்சத்து 66ஆயிரத்து 399பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 32ஆயிரத்து 243பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12இலட்சத்து 35ஆயிரத்து 496பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 982பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 52இலட்சத்து 98ஆயிரத்து 660பேர் பூரண குணமடைந்துள்ளனர்.