ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் 50இலட்சத்து 25ஆயிரத்து 233பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஒன்பதாவது நாடாக விளங்கும் ஈரானில், இதுவரை ஒரு இலட்சத்து எட்டாயிரத்து 393பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 33ஆயிரத்து 170பேர் பாதிக்கப்பட்டதோடு 599பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறு இலட்சத்து 79ஆயிரத்து 525பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஏழாயிரத்து 860பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 42இலட்சத்து 37ஆயிரத்து 315பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.