பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 37ஆயிரத்து 011பேர் பாதிக்கப்பட்டதோடு 68பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 69இலட்சத்து 78ஆயிரத்து 128பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 33ஆயிரத்து 229பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12இலட்சத்து 35ஆயிரத்து 322பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 38பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 56இலட்சத்து ஒன்பதாயிரத்து 575பேர் பூரண குணமடைந்துள்ளனர்.