ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி ஒன்று நிறைவுபெற்றுள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் கிரேக்க வீராங்கனை பார்போரா கிரெஜகோவி, பெலாரஷ்ய வீராங்கனை அரினா சபலெங்காவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆரினா சபலெங்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.