மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை ஆயிரத்து 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
மியன்மார் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்தது.
இதனை தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் உருவாகியுள்ளன. இந்த குழுக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.