மொடர்னா தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வறிக்கை எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
மொடர்னா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன என்றும் அந்த ஆய்வு நடவடிக்கைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்புட்னிக் – வி தடுப்பூசியின் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வு எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டமார்.