வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகளில் சிலர், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததும், சிறைச்சாலையின் கூரையின் மீது போராட்டம் நடத்தியதாக கைதிகள் உரிமைக் குழு குறிப்பிடுகிறது.
நேற்று (திங்கட்கிழமை), ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 10 கைதிகளே வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக, நீண்ட காலமாக சிறையிலுள்ள சாதாரண கைதிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைதிகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தே அச்சுறுத்தியமை தொடர்பில், சாட்சியமளிக்க வேண்டிய சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக சந்தேகம் இருப்பதாக சமகி ஜனபலவேகய கூறியுள்ளது. .
இதற்கிடையில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன, இந்தச் சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் அளித்த ஆதாரங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.