ஐ.பி.எல். ரி-20 தொடரின் 31ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி வெற்றிபெற்றுள்ளது.
அபுதாபி மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 19 ஓவர்கள் நிறைவில் 92 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தேவ்தத் படிக்கல் 22 ஓட்டங்களையும் ஸ்ரீகர் பாரத் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் லொக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும் பிரசீத் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 93 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 10 ஓவர்கள் நிறைவில், 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 48 ஓட்டங்களையும் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பெங்களூர் அணியின் பந்துவீச்சில், யுஸ்வேந்திர சஹால் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 4 ஓவர்கள் வீசி 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளிய வருண் சக்கரவர்த்தி தெரிவுசெய்யப்பட்டார்.