வவுனியா- கனகராயன்குளம் தெற்கு மற்றும் ஊஞ்சல்கட்டி பிரிவு கிராம சேவகர்கள் இருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த கிராமசேவகர்களுக்கு காய்ச்சல் இருந்த நிலையில் துரித அன்ரியன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.