யாழ்ப்பாணம்- கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமற்போயிருந்த நிலையில், கிணறு ஒன்றிலிருந்து சடலமாக நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது-51) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அவரைக் காணவில்லை என குடும்பத்தினர் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையிலேயே 2 நாட்களின் பின்னர் நேற்று, நவாலிப்பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மன விரத்திக்குள்ளாகிய நிலையில், சிகிச்சை பெற்று வந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.