ஐ.பி.எல். ரி-20 தொடரில் இடம்பெற்றுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலிருந்து, இங்கிலாந்தின் சகலதுறை வீரரான சேம் கர்ரன் வெளியேறியுள்ளார்.
முதுகில் ஏற்பட்ட காயத்தால் சேம் கர்ரன் 2021ஆம் ஆண்டின் எஞ்சியப் பகுதியில் விளையாட மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக மேற்கிந்திய தீவுகளின் இடதுக்கை மித வேகப்பந்து வீச்சாளரான டோமினிக் ட்ரேக்ஸ் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் வாஸ்பெர்டின் மகனான டோமினிக் ட்ரேக்ஸ், 2021ஆம் ஆண்டு சம்பியன் பட்டத்தை வென்ற செயின்ட் கிட்ஸ்- நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் நட்சத்திர வீரரான இந்த தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
குறிப்பாக 23 வயதான டோமினிக் ட்ரேக்ஸ், இறுதிப் போட்டியில் 24 பந்துகளில் 48 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவுள்ளது.