வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியாவிலுள்ள இந்து ஆலயங்களில் இடம்பெறுகின்ற நவராத்திரி பூஜையில் மூவருடன் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுகாதாரத்துறையினரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர் .
குறித்த கலந்துரையாடலில் அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, அரச சுற்றறிக்கையில் வழிபாட்டுத்தளங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது .
ஆனாலும் மூவருடன் வழிபாட்டுத்தளங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது அரச சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
மேலும், இந்த தகவல் உண்மைக்குப்புறம்பானது. பொதுமக்கள் ஆலய வழிபாடுகளில் அதனையும் மீறி ஒன்று கூடினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.