நேபாளத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நேபாளத்தில் மொத்தமாக எட்டு இலட்சத்து 282பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 44ஆவது நாடாக விளங்கும் நேபாளத்தில் இதுவரை 11ஆயிரத்து 200பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால். 667பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 15ஆயிரத்து 942பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஏழு இலட்சத்து 73ஆயிரத்து 140பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.