• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மீன்பிடி அமைச்சர் அதிகாரத்தை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் இருக்கிறார் – எம் .ஏ. சுமந்திரன்

மீன்பிடி அமைச்சர் அதிகாரத்தை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் இருக்கிறார் – எம் .ஏ. சுமந்திரன்

shagan by shagan
2021/10/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
98 1
A A
0
54
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்துமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அவர் சந்தித்த பின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து எங்களுடைய மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்களை பாதிக்கச் செய்த பல விடயங்கள் அண்மைக்காலமாக நடந்திருக்கின்றன.அவர்களுடைய லட்சக்கணக்கான மீன்பிடி உபகரணங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டது. இந்த விடயங்கள் சம்பந்தமாகவே இந்தியத் துணைத் தூதருடன் பேசி இருக்கின்றோம்.

இவற்றுக்கு என்ன செய்யலாம் என்று இழப்பீடுகள் தொடர்பாகவும் நாம் பேசியிருக்கிறோம். வடமராட்சி கிழக்கில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அங்குள்ள மீனவ சங்கங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தை இந்திய பிரதித்தூதரிடம் நான் அனுப்பியிருந்தேன்.

அத்துமீறி பிரவேசித்து எங்களுடைய வளங்களை சுரண்டுவதால் மீன்வளங்கள் அற்றுப்போகின்றது.

2018 ஆம் ஆண்டு இழுவை மடி தொழிலை தடுக்க வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அது சட்டமாக்கப்பட்டாலும் மீன்பிடி அமைச்சு அந்த சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பது தான் இதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது. அந்த சட்டத்தை அமல்படுத்தினால் இந்த பிரச்சினை பெரிய அளவிலே தீர்ந்து விடும்.

அந்த சட்டம் கொண்டுவரப்பட்டபோது இந்திய வெளிவிவகார அமைச்சு ஓர் எச்சரிக்கை ஒன்றை தமிழக மீனவர்களுக்கு விடுத்திருந்தது. ஒரு கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆகவே இலங்கை கடற்பரப்புக்குள் போகவேண்டாம் என்ற எச்சரித்தது.

இதன் காரணமாக ஓரிரு வருடங்களாக வராமல் இருந்திருந்த தமிழக மீனவர்கள், அந்த சட்டம் அமுல்ப்படுத்தப்படவில்லை என தெரிந்த பின்னர் மீண்டும் வர ஆரம்பித்து விட்டார்கள்.

அத்துமீறுபவர்களை கைது செய்து இந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது என்பதை மீன்பிடி அமைச்சு செய்ய வேண்டும்.

ஆகவே சட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பதே அத்துமீறல் தொடர்ச்சியாக நடப்பதற்குக் காரணமாக இருக்கின்றது.

மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால் சட்டங்களை இயற்றி கொடுத்திருக்கின்றோம். இதற்கான ஆயுதத்தை உங்களிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பதின்மூன்றாம் திருத்தம் தொடர்பிலும் சில கருத்துப் பரிமாற்றங்களை செய்து இருக்கின்றோம்.இந்திய வெளியுறவுச் செயலாளருடன் பேசியதன் தொடர்ச்சியாக 13ம் திருத்தத்தில் இருக்கின்ற முழு அதிகாரங்களையும் அமல்படுத்த வேண்டும் என்பதை இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றது. முழு அதிகாரத்தையும் அமல்படுத்துவதாக இருந்தால் பொலிஸ் அதிகாரத்தையும் அமுல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாகாணத்துக்கும் பொலிஸ்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். முழுமையாக 13ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று அரசாங்கம் சொன்னால் அதனை செய்து காட்ட வேண்டும்” என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்தார் எம்.ஏ.சுமந்திரன்!

Next Post

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 27 ஆயிரத்தைக் கடந்தது

Related Posts

ஆய்விற்காகவே சுற்றுலாக் கப்பலில் கடலுக்குச் சென்றோம் : இராஜாங்க அமைச்சர்!
இலங்கை

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை!

2026-04-22
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!
இலங்கை

ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

2026-04-22
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

2026-04-22
யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!
இலங்கை

யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

2026-04-22
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!
இலங்கை

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

2026-04-22
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
Next Post
நாட்டில் மேலும் ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா – 41 உயிரிழப்புகளும் பதிவு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 27 ஆயிரத்தைக் கடந்தது

யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரின் தியாகங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை – பிரதமர்!

சம்பள முரண்பாடு: ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் மீண்டும் சந்திப்பு!

கண்டாவளையில் காணி தகராறு காரணமாக ஒருவரின் கை துண்டிப்பு

கண்டாவளையில் காணி தகராறு காரணமாக ஒருவரின் கை துண்டிப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஆய்விற்காகவே சுற்றுலாக் கப்பலில் கடலுக்குச் சென்றோம் : இராஜாங்க அமைச்சர்!

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை!

0
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

0
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

0
யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

0
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

0
ஆய்விற்காகவே சுற்றுலாக் கப்பலில் கடலுக்குச் சென்றோம் : இராஜாங்க அமைச்சர்!

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை!

2026-04-22
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

2026-04-22
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

2026-04-22
யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

2026-04-22
ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

ஹார்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இரண்டாவது கொள்கலன் கப்பல்!

2026-04-22

Recent News

ஆய்விற்காகவே சுற்றுலாக் கப்பலில் கடலுக்குச் சென்றோம் : இராஜாங்க அமைச்சர்!

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை!

2026-04-22
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

2026-04-22
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

ஹார்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஈரான் கடற்படை அதிரடி!

2026-04-22
யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

யாழ் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்பம்!

2026-04-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.