பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 520பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 181பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 82இலட்சத்து 31ஆயிரத்து 437பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 37ஆயிரத்து 944பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 69ஆயிரத்து 152பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 747பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 67இலட்சத்து 24ஆயிரத்து 341பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.