பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 42ஆயிரத்து 776பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 136பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 82இலட்சத்து 72ஆயிரத்து 883பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 38ஆயிரத்து 080பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 69ஆயிரத்து 174பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 780பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 67இலட்சத்து 65ஆயிரத்து 629பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.