பிரித்தானியாவில் ஜூலை மாத நடுப்பகுதிக்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 52ஆயிரத்து 009பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 115பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 86இலட்சத்து 41ஆயிரத்து 221பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 39ஆயிரத்து 146பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 14இலட்சத்து 44ஆயிரத்து 489பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 872பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.